கோவை திருவள்ளுவர் நகரில் காட்டு யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

கோவை திருவள்ளுவர் நகரில் இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து உலா வந்தன. ஒரு யானை குடியிருப்பாளர்களை தாக்க முயன்றது. வனத்துறையினரின் உடனடி நடவடிக்கை தேவை என பொதுமக்கள் கோரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் தடாகம், மாங்கரை, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

நேற்று இரவு திருவள்ளுவர் நகர் பகுதிக்கு வந்த இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்தன. இந்த சமயத்தில், ஒரு வீட்டின் முன் கேட்டில் நின்றுகொண்டிருந்த குடியிருப்பாளர்களை ஒரு யானை திடீரென தாக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக, அனைவரும் வேகமாக வீட்டிற்குள் ஓடி உயிர் தப்பினர்.



இந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் தங்கள் கைபேசிகளில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இதற்கு முந்தைய நாள், தடாகம் தண்ணீர் பந்தல் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த ஓலைக் குடிசையை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...