கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூலை 31, 2024 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூலை 31, 2024 வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. FITTER, TURNER, MACHINIST, COPA, ICTSM, INSTRUMENT MECHANIC, MMTM, PPO, TECHNICIAN MECHATRONICS, FOOD PRODUCTION, INTERIOR DESIGN AND DECORATION, EM, REMOTELY PILOTED AIRCRAFT (DRONE PILOT) போன்ற ஆறு மாதம், ஓராண்டு மற்றும் ஈராண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் இதில் அடங்கும்.

TATA INDUSTRY 4.0 திட்டத்தின் கீழ் புதிய தொழிற்பிரிவுகளான ADVANCED CNC MACHINING TECHNICIAN, INDUSTRIAL ROBOTICS & DIGITAL MANUFACTURING, BASIC DESIGNER & VIRTUAL VERIFIER, மற்றும் MANUFACTURING PROCESS CONTROL AUTOMATION ஆகிய ஈராண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளிலும் காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெறும்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்பதால், விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம் என்பதோடு, அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள், வரைபடக்கருவிகள் மற்றும் NIMI புத்தகம் ஆகியவை அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாதம் ரூ.750/- வீதம் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி தொழிற்பிரிவுகளைப் பொறுத்து 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மற்றும் பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு உணவு வசதியுடன் தங்கும் விடுதி வசதி தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும். வயது வரம்பு 14 முதல் 40 வரை என்றாலும், மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு 0422-2642041, 8825434331, 8072737402 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...