திருப்பூரில் குடியிருப்பு வாசிகள் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயற்சி - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பூர் வீரபாண்டி அருகே வஞ்சி நகரில் 30 ஆண்டுகளாக வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் குடியிருப்புக்கு செல்லும் வழியை குடிசை மாற்று வாரியம் தடுப்பதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயன்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள வஞ்சி நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 1050 மனைகள் தனியாரால் விற்பனை செய்யப்பட்டன. இந்த இடத்திற்கு 40 அடி அகலம் கொண்ட சாலை இருப்பதாக பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், பஞ்சாயத்து ஒப்புதலும் பெறப்பட்டது. தற்போது இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், அந்த குடியிருப்புக்கு அருகில் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சாலை அமைந்துள்ள இடம் சொந்தம் என கூறி வேலி அமைக்க முயற்சிப்பதாக குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டினர். இதனால், தாங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வழியாக சென்று பின்னர் தங்கள் குடியிருப்புக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் செல்ல முடியாத குறுகலான பாதை மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



இந்த பிரச்சினை தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கோபத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை திரும்ப வழங்க முயன்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...