கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து உடுமலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து உடுமலை-பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மது விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக வெங்கட கிருஷ்ணா சாலையில் இருந்து வித்யாசாகர் சாலை வழியாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமையில் ஊர்வலமாக சென்ற பாஜகவினர் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினர்க்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் வலுகட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.



இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் மலர்க்கொடி, மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.குட்டியப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், நகர தலைவர் கண்ணாயிரம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...