தெற்கு மண்டலம் 94வது வார்டில் சுகாதாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை தெற்கு மண்டலம் 94வது வார்டுக்குட்பட்ட சுந்தராபுரம், மாச்சம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகர்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



மேலும், அப்பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொதுமக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



உடன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் இருந்தனர். 

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...