கோவையில் சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

சந்தேகத்திற்கிடமாக பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றனவா? என்பதனை தொடர்ந்து முறையாக கண்காணித்திட வேண்டும் என வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.


கோவை: பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் புலனாய்வு பிரிவு, மத்திய மாநில கலால் பிரிவு, வருமானவரித்துறை உள்ளிட்ட அமலாக்கத்துறை அலுவலர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் செலவின பார்வையாளர்களான கீது படோலியாய், உம்மே ஃபர்டினா அடில் மற்றும் பொள்ளாச்சி செலவின பார்வையாளர்களான ஆஷிஷ் குமார், சௌரப் குமார் ராய், நீலகிரி செலவின பார்வையாளரான சந்தீப் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.



இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, வட்டாட்சியர்(தேர்தல்) தணிகைவேல் மற்றும் வங்கியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.



இதில் வங்கிகளில் வழக்கத்திற்கு மாறாக மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுத்தல், கடந்த இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட் அல்லது திரும்பப் பெறுதல், ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பலரின் கணக்குகளுக்கு RTGS மூலம் வழக்கத்திற்கு மாறான பணப் பரிமாற்றம், மாவட்டம் தொகுதியில் உள்ள நபர்கள் அத்தகைய இடமாற்றத்தின் முன்மாதிரி இல்லாமல் ரொக்கமாக ஏதேனும் வைப்புத்தொகை செலுத்துதல், பணம் எடுத்தல், தலைமை நிர்வாக அதிகாரியின் இணையதளத்தில் கிடைக்கும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வேட்பாளர்கள் / மனைவி / அவரைச் சார்ந்தவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம், ரொக்கம் திரும்பப் பெறுதல் மற்றும் ரொக்கமாக வைப்பு, வாக்காளர்களுக்கு கொடுக்கப் பயன்படுத்தப்படும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் மூலம் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப் பயன்படுத்தப்படலாம் என்று சந்தேகம் இருந்தால் வங்கிகள் அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள பறக்கும் படைக்கு தகவல் அளிக்கலாம்.

சரியான சரிபார்ப்புக்குப் பிறகு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருப்பினும், ரொக்க வைப்புத் தொகை அல்லது திரும்பப் பெறுதல் தொகை ரூ.10 இலட்சம் இருந்தால், வருமானத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக, வருமான வரித் தகவல் அனுப்பப்படும்.

இக்கூட்டத்தில் சந்தேகத்திற்கிடமாக பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றனவா? என்பதனை தொடர்ந்து முறையாக கண்காணித்திட வேண்டும் என வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...