தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய வந்த திமுக வேட்பாளர் பிரகாஷூக்கு கருப்பு கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு

ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ், அமைச்சர் கயல்வியுடன் தேர்பாதை என்ற இடத்திற்கு பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். அப்போது, கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் அணைக்கு தண்ணீர் கொடு இல்லையென்றால் வெளியேறு என கோஷமிட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ளது உப்பாறு அணை. இந்த அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி நீரை அரசூர் சட்ட வழியாக திறந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பாசன விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் இடம் ஏழு முறை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் ஒருமுறை கூட கலெக்டர் உப்பாறு பாசன விவசாயிகள் இடம் பேசவில்லை. இதனால் நீதி கிடைக்க வேண்டும் என உப்பாறு பாசன விவசாயிகள் கெத்தல்ரேவ், தேர்பாதை, பனமரத்து பாளையம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், தொப்பம்பட்டி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், தோட்டங்கள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டியும் , வராதே! வராதே! ஓட்டுக் கேட்டு ஊருக்குள்ளே வராதே! உப்பாறு அணைக்கு உயிர் நீர் கேட்டு போராடும் போது வராதவர்கள். இன்று, உங்கள் தேவைக்கு ஓட்டுக் கேட்க மட்டும் வராதே!வராதே! ஓட்டுக் கேட்டு யாரும் ஊருக்குள்ளே வராதே என்ற வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அமைச்சர் கயல்வியுடன் தேர்பாதை என்ற இடத்திற்கு தற்போது பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். அப்போது அங்கு காத்திருந்த உப்பாறு பாசன விவசாயிகள் கையில் கருப்புக்கொடி காட்டி அணைக்கு தண்ணீர் கொடு இல்லையென்றால் வெளியேறு என கோஷமிட்டவாரு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்‌.



இதனை தொடர்ந்து தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கோரி வந்தார். இந்த நிலையில் வேட்பாளர் பிரகாஷ் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்றார். இதனால் தாராபுரம்-பூளவாடி சாலை தேர்பாதை என்ற இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...