தென் குமாரபாளையம் கிராமத்திற்கு சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள தென்குமாரபாளையம் கிராமத்தில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுவதாக கூறப்படுகிறது.



மேலும் இந்த கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ள அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை கிராம முற்றுகையிட்டு சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்து முறையிட்டனர்.

அம்பராம்பாளையம் ஆற்றில் தண்ணீர் இருந்தும் தற்போது மின்தடையும் ஏதும் இல்லாத போதிலும் தங்கள் கிராமத்திற்கு நாள்தோறும் ஒதுக்கப்பட்ட தண்ணீர் முறையாக வருவதில்லை எனவும், தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலானதால் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீர் இல்லாத காரணத்தால் கிராமத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முறையாக குடிநீர் வழங்காமல் மெத்தனப் போக்காக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இன்னும் இரண்டு நாட்களில் தண்ணீர் வரவில்லை என்றால் கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என முற்றுகையிட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...