கோவையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கான விழிப்புணர்வு வாகனங்கள் துவக்கி வைப்பு

விழிப்புணர்வு வாகனங்கள் இரண்டும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்று கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்றும், அதுமட்டுமல்லாது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்


கோவை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வருகின்ற 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து பொது மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இரண்டு விழிப்புணர்வு வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் ஆகியோர் வாகனத்தை பார்வையிட்டு, கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.



முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கு தனியார் பள்ளி இசைக்குழு மாணவர்கள் இசை மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், விளையாட்டு அணி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் வீரமங்கை வேடமிட்ட இருவர், அனைவரையும் உற்சாகப்படுத்தினர். விழிப்புணர்வு வாகனங்கள் இரண்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் எனவும் அதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...