கோவை வந்த தமிழக முதலமைச்சரிடம் அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிரைவேற்ற வேலுநாச்சியார் இயக்கத்தினர் மனு

கோவை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிரைவேற்ற வேண்டி அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் வேலுநாச்சியார் இயக்கத்தினர் மனு அளித்தனர்.

சேலம் மற்றும் எடப்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அவரை மாவட்ட, மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து அவரை நேரில் சந்தித்த அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் அத்திக்கடவு வேலுநாச்சியார் இயக்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை தேசிய பேரிடராக கருதி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்ற உறுதிபூண்டிருந்ததாகவும், இது தொடர்பாக கோவை வந்த பிரதமர் மோடியிடமும் தாம் வலியுறுத்தியிருந்ததாகவும் தெரிவித்தார். விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அப்போது உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து சேலத்திற்கு கார் மூலம் முதலமைச்சர் புறப்பட்டு சென்றார். முன்னதாக, முதலமைச்சர் வருகையை ஒட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...