கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத் தலைவி அடாவடி பேச்சு - கிராம சபை கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளிநடப்பு

கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அலங்கியம் சாலை திரு.வி.க நகர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கிராம மக்களிடம் ஊராட்சி மன்றத் தலைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கிராம சபை கூட்டத்தில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


திருப்பூர்: தங்கள் கிராமப் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அலங்கியம் சாலை திரு.வி.க நகர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஊராட்சி மன்ற தலைவர் வாசிக்க தொடங்கினார். அப்போது கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமப் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய செல்வி, பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை வசதி, தார் சாலை வசதி, குப்பை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வியிடம் தெரிவித்தனர்.



ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் கிராம பொதுமக்களிடம் எதையும் செய்ய முடியாது நாங்கள் செய்து விட்டோம் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...