தாராபுரத்தில் அரசு டாக்டர் வீட்டில் 9 பவுன் நகை மாயம் - திருட்டு மூதாட்டிக்கு சிறைத்தண்டனை

தாராபுரத்தில் டாக்டர் வீட்டில் வேலைப் பார்த்துக்கொண்டு, ஒன்பது பவுன் நகைகளை திருடிச்சென்ற கஸ்தூரி என்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: வீட்டு வேலை பார்த்த டாக்டர் வீட்டிலேயே சிறிது சிறிதாக ஒன்பது பவுன் நகைகளை மூதாட்டி திருடி அடகு வைத்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த பொன் கார்த்திகேயன் மனைவி வித்யா. இவர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டு வேலைக்கு தாராபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த ஞான பிரகாசம் மனைவி கஸ்தூரி (வயது58) என்பரை வீட்டு வேலைக்கு வைத்துள்ளார்.

இவர் தினசரி டாக்டர் வீட்டிற்கு சமையல் செய்வது மற்றும் துணிகளை துவைப்பது, வீட்டை பெருக்குவது போன்ற வீட்டு வேலைகளை செய்து வந்தார். தெரிந்த மூதாட்டி என்று நம்பி வீட்டை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கஸ்தூரி டாக்டர் வீட்டில் இருந்து சிறிது சிறிதாக நகைகளை திருடி சென்றுள்ளார். இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த வித்யா 9 பவுன் நகைகள் காணாமல் போனது குறித்து கஸ்தூரியிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதுகுறித்து வித்யா தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுததார்.

புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் பெண் போலீசார், கஸ்தூரியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது டாக்டர் வீட்டில் திருடப்பட்ட 9 பவுன் நகைகளை அடகு வைத்துள்ளதாக கூறி நகைளை திருடியதை ஒப்புக்கொண்டார்.



இது குறித்து போலீசார் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து நகையை பறிமுதல் செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...