சந்திரயான் விண்கலத்தை தத்ரூபமாக வடிவமைத்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள கேம்போர்டு பள்ளி மாணவர்கள்,  சந்திரயானின் மாதிரியை தத்ரூபமாக வடிவமைத்தனர். மேலும் மாணவர்கள் தங்கள் கன்னங்களில் சந்திராயன் மற்றும் தேசிய கொடியை வரைந்து அசத்தியுள்ளனர்.


கோவை: கோவையில் பள்ளி மாணவர்கள் விக்ரம் லேண்டரிலிருந்துபிரக்யான் ரோவர் இறங்குவது போல் தத்ரூபமாக வடிவமைத்ததுடன் மாணவர்களின் கன்னங்களில் சந்திரயான் விண்கலத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிக்கரமாக தரையிறக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர். நாடு முழுவதும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள கேம்போர்டு பள்ளி மாணவர்கள், சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக கையாண்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்திராயனின் மாதிரியை தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.

இதில் விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் இறங்குவது போல் மாணவர்கள் தயாரித்ததோடு, கன்னங்களில் சந்திரயான் 3 விண்கலம் மற்றும் தேசிய கொடியை வரைந்து அசத்தினர்.



தொடர்ந்துகோவையிலிருந்து விண்கலம் தயாரிப்பதற்காக உதிரி பாகங்கள் எடுத்து செல்லப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ இயக்குனர் வீரமுத்துவேல் இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததை பள்ளி மாணவர்கள் கொண்டாடினர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...