மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மேயர் கல்பனாவிடம் 55 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமாரிடம்‌ 55 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.



கோவை: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள்‌ அளித்த கோரிக்கை மனுக்களின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அலுவலா்களுக்கு மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ இன்று (22.08.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ துணை மேயா்‌ ரா.வெற்றிசெல்வன்‌‌, மாநகராட்சி துணை ஆணையாளர்கள்‌ க.சிவகுமார்‌, மரு.ச.செல்வசுரபி ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்.



இக்கூட்டத்தில்‌ மேயரிடம்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ 55 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர்‌ இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.

இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 12 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 4 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 12 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 7 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 11 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 9 மனுக்களும்‌ ஆகமொத்தம்‌ 55 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌,‌ இம்மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளா்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்‌, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) செந்தில்குமார்‌ இரத்தினம்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தர்ராஜ், மண்டல உதவி ஆணையர்கள்‌ செந்தில்குமரன்‌, மகேஷ்கனகராஜ்‌, நகர் நல அலுவலர்‌ மரு.தாமோதரன்‌, செயற்பொறியாளார்கள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலாகள்‌, உதவி பொறியாளார்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலா்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...