இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார் டெண்டுல்கர்

இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.



இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டுள்ள டெண்டுல்கர், மூன்று வருட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்காளர் விழிப்புணர்வை பரப்புவார் என்று கூறப்படுகிறது.

தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்கான வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.

கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது. முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ். தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை அன்று டெண்டுல்கருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே கையெழுத்தாகிறது. மூன்று வருட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெண்டுல்கர் வாக்காளர் விழிப்புணர்வை பரப்புவார் என்று கூறப்படுகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...