பிரதமரின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு 73 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் - பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிய கோவை மாவட்ட பாஜகவினர்

பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாளையொட்டி கோவையில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பூமி பூஜை செய்து பாஜகவினர் தொடங்கியுள்ளனர்.


கோவை: பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, நடைபெறும் இலவச திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 73வது பிறந்தநாள் காண்கிறார். பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை செட்டிப்பாளையம்- போத்தனூர் சாலையில் சக்தி பள்ளிக்கு எதிரில் 73 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் பூமி பூஜை செய்து திருமணத்திற்கான பணிகள் துவங்கியது. இந்நிகழ்வில் மாநில பொது செயலாளர் முருகானந்தம், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பூஜைகள் செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...