பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்க திட்டத்தில் சாலையோர மின்கம்பங்களை அகற்றாமல் சாக்கடை கால்வாய் அமைப்பதற்கு பொதுமக்கள் கண்டனம்!

பல்லடம் - தாராபுரம் இடையேயான சாலை விரிவாக்க திட்டத்தில் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் பணிகள் நடைபெற்று வருவதால் பேரிடர் காலங்களில் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக கூறியுள்ள பொதுமக்கள், மின்கம்பங்களை அகற்றிவிட்டு சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என மாநில நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்கத் திட்டத்தில் சாலையோர மின் கம்பங்களை அகற்றிவிட்டு கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையானது பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்யும் பணி பல்வேறு நிறுவனங்களால் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்க பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இதனிடையே, சாலையோரங்களில் ஏற்கனவே மின்வாரியத்தால் அமைக்கப்பட்டிருந்த ரோட்டோர மின்கம்பங்களை கவனிக்காமல் சாலை விரிவாக பணியின் போது ரோட்டோரம் மின் கம்பங்களை அப்படியே நடுவில் வைத்து இருபுறமும் கழிவுநீர் சாக்கடை செல்லும் கால்வாயானது அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இது குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறியதாவது, மழை, சூறாவளி காற்று போன்ற பேரிடர் காலங்களில் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியின் போது சாக்கடை கழிவுநீர் வாய்க்காலின் நடுப்பகுதியில் வைத்துள்ளதால் ரோட்டோர மின்கம்பங்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் உடைமைகளை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக நகராட்சியும், மாநில நெடுஞ்சாலை துறையினரும், மின்சார வாரியமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள சாக்கடை கால்வாய் நடுவில் உள்ள ரோட்டோர மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...