கோவையில் உரிமம் இல்லாத மதுபான கடை, மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உரிமம் இல்லாமல் பேருந்து நிறுத்தம் மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்றத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் உரிமம் இல்லாத மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்றத்தை அகற்ற கோரி மனு அளிக்கப்பட்டு உள்ளது.



மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உரிமம் இல்லாத மதுபான கடைகள் மற்றும் மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது, இப்பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அருகிலும் உரிமம் வழங்காமல் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே தனியாருக்கு சொந்தமான மனமகிழ் மன்றம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் மது அருந்துபவர்களால் அடிக்கடி தகராறுகள் நடைபெறுகின்றன.

மேலும் அப்பகுதியிலேயே உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது.

எனவே உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்றத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...