உடுமலையில் முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் உடுமலை - பழனி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துடன் பலமுறை பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.



இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை - பழனி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய கோட்டை பிரிவு பகுதியில் காலி குடங்களுடன் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை காவல்துறையினர் முறையாக குடிநீர் வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக பொதுமக்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியல் காரணமாக உடுமலை - பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...