வி.கே.வி குருப்ஸ் சார்பில் 17வது ஆண்டாக ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்!

நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான 5500க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வி.கே.வி குருப்ஸ் சார்பில் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ் வழங்கினார்.



கோவை: நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளியில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு விகேவி குழுமம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு வி.கே.வி. குருப்ஸ் சார்பாக 17-ம் ஆண்டு நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிக்குட்பட்ட அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர். உதவி தலைமை ஆசிரியர்கள் வரவேற்று பேசினர். ஊராட்சி மன்ற பொறுப்பில் உள்ளவர்கள், ஊர் பெரியவர்கள், பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலை வகித்தனர்.



இதில் சோமையனூர் நடுநிலைப்பள்ளி, உச்சையனூர் தொடக்கப்பள்ளி, நஞ்சுண்டாபுரம் தொடக்கப்பள்ளி, இராமநாதபுரம் தொடக்கப்பள்ளி, வரப்பாளையம் தொடக்கப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 5500க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வி.கே.வி குருப்ஸ் சார்பாக நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மாணிக்கம், சின்ராஜ், ஊராட்சி துணைத்தலைவர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் சோமசுந்தரம், குமாரசாமி, நாகராஜ், இந்திராணி, சசிகுமார், ஆறுமுகம், புஷ்பலதா, திவியா, கிருஷ்ணவேணி, ஆனந்தன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...