கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நகராட்சி தலைவர் அறிவரசு மற்றும் ஆணையாளர் கோபிநாத் அறிவுரையின் பேரில், சுகாதார ஆய்வாளர்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் வீடுகள், காலி மனைகள், கட்டுமானப் பகுதிகள், பொது இடங்கள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, தேங்கிய நீர் அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் வாரம் ஒருமுறை வீடு மற்றும் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்து ஒத்துழைக்குமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Coimbatore: கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகராட்சி தலைவர் அறிவரசின் அறிவுரையின் பேரிலும், நகராட்சி ஆணையாளர் கோபிநாத் நடவடிக்கையின் பேரிலும் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகராட்சி சுகாதாரப் பிரிவின் சார்பில் சுகாதார ஆய்வாளர்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து வீடுகள், காலி மனைகள், கட்டுமானப் பகுதிகள், பொது இடங்கள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



ஆய்வின்போது கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, தேங்கியுள்ள நீர் அகற்றுதல், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல், கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான இடங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், பயன்படுத்தப்படாத டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.



பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை வாரத்திற்கு ஒருமுறை முழுமையாக ஆய்வு செய்து, கொசுப்புழு உற்பத்தியாகும் வாய்ப்புள்ள இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

டெங்கு இல்லாத கூடலூர் நகராட்சியை உருவாக்க நகராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி தலைவர் அறிவரசு மற்றும் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...