கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செப்டம்பர் 19, 2026 அன்று டெங்கு விழிப்புணர்வு வீதி நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் கோலப்போட்டி, காய்ச்சல் கண்டறியும் முகாம், நிலவேம்பு குடிநீர் விநியோகம், ரங்கோலி போட்டி மற்றும் மரக்கன்று நடவு உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றன. மகளிர் விடுதி மாணவிகள், பள்ளி மாணவிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஐந்து மண்டலங்களிலும் 6,959 வீதிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு வீதி என்ற தலைப்பில், பன்முக டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தலைமையில் இன்று (19.09.2026) நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், டெங்கு கொசு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 'மக்கள் பங்களிப்பை தருவோம், டெங்குவை ஒழிப்போம்' என்ற பதாகையில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார். கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள், டெங்கு கொசு உற்பத்தியாகும் கலன்கள் ஆகியவை கொலு வடிவில் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததை அவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமிகள், மகளிர்கள் உள்ளிட்ட அனைவரும் டெங்கு விழிப்புணர்வு கோலப்போட்டியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மூத்த குடிமக்கள் தாமாக முன்வந்து டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு தோறும் வழங்கினார்கள். நடமாடும் மருத்துவ குழுவினர் மூலம் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு செல்பி பாய்ண்டில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக உரையாற்றிய அருட்செல்வி, வைஷ்ணவி மற்றும் ஆர்த்தி ஸ்ரீ ஆகியோரை பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு குறும்படத்தினையும் அவர் பார்வையிட்டார். இறுதியாக, சிறப்பாக ரங்கோலி வரைந்தமைக்காக பரிசுகள் வழங்கப்பட்டது.

இப்பகுதியில் அமைந்திருந்த இரண்டு மகளிர் விடுதிகளில் தங்கி இருந்தவர்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, டெங்கு தடுப்பு பணிகளுக்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இன்று நடைபெற்ற நிகழ்ச்சி போன்று ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று ஐந்து மண்டலங்களிலும் 6,959 வீதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அடுத்த வாரம், விடுதி பகுதிகளில் டெங்கு தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திட ஆணையாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டு, நிகழ்ச்சியினை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் அவர் பாராட்டினார்.

மேலும், டெங்கு விழிப்புணர்வு வீதி நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கெடுத்து, மக்கள் பங்களிப்பை தந்து, டெங்குவை ஒழிப்பதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மரக்கன்றுகளை நடவு செய்த பின்பு, மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் தலைமையில், சுகாதார உறுதிமொழியினை (டெங்கு விழிப்புணர்வு) மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவிகள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஸ்ரீ இராமகிருஷ்ணா நர்சிங் பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின்போது, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) கிருஷ்ணராஜ், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, மாநகராட்சி நகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, உதவி ஆணையர் கணேசன், 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரபா ரவீந்திரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணக்குமார், ஜெகநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் மாலதி, பள்ளி மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், சி.டி.எம்.ஹோம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.