தியானலிங்கம்‌ மன அமைதியை தருகிறது - ஈஷாவிற்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம்‌!

கோவை ஈஷாவிற்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானம்‌ ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌, தியானலிங்கம் மனதிற்கு அமைதியை தருவதாக தெரிவித்தார். மேலும் இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுப்பது, மரங்கள்‌ நடும்‌ பணிகளை மேற்கொள்வது போன்ற செயல்கள்‌ மிகவும்‌ பாராட்டுக்குரியவை எனவும் கூறினார்.



கோவை: தியானலிங்கம் மனதிற்கு அமைதியை தருவதாக திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌ தெரிவித்துள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானம்‌ ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌ கோவை ஈஷா யோகா மையத்திற்கு கடந்த ஜூன்‌ 18 வருகை தந்தார்‌. 



அவருக்கு மடாதிபதிகளை வரவேற்கும்‌ சம்பிரதாய முறைப்படி நூற்றுக்கணக்கானோர்‌ திரண்டு வரவேற்பு அளித்தனர்‌. 



பின்னர்‌, மகா சன்னிதானம்‌ பார்வையிடுவதற்காக ஆதியோகியில்‌ சிறப்பு திவ்ய தரிசனம்‌ ஏற்பாடு செய்யப்பட்டது.



இதையடுத்து, நேற்று காலை (ஜூன்‌ 19) கைலாய வாத்தியம்‌ முழங்க ஆலயங்களுக்கு மகா சந்நிதானம்‌ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்‌ தியானலிங்கம்‌, லிங்கபைரவி, நாகா சந்நிதி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம்‌ செய்தார்‌. 

பின்னர்‌, நாட்டு மாடுகளை பராமரிக்கும்‌ ஈஷாவின்‌ கோசாலையை பார்வையிட்டார்‌. மேலும்‌, ஈஷா சம்ஸ்கிருதி குருகுலத்திற்கு சென்று மாணவர்களின்‌ களரி பயட்டை நேரில்‌ கண்டு களித்ததோடு மாணவர்களுடன்‌ கலந்துரையாடினார்‌.

மகா சந்நிதானம்‌ ஈஷாவிற்கு வருகை தந்தது குறித்த தனது அனுபவம் குறித்து பேசியதாவது, சத்குருவின்‌ ஈஷா அறக்கட்டளைக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று தரிசனம்‌ செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள தியானலிங்கம்‌ மன அமைதியை தருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம்‌ முழுவதும்‌ இருந்து லட்சக்கணக்கான மக்கள்‌ இங்கு வந்து யோகா கற்று பயனடைகிறார்கள்‌. இந்த யோக பயிற்சிகள்‌ அவர்களின்‌ உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்பட உதவும்‌. மன அமைதியையும்‌ அளிக்கும்‌. 

தேவார பாட சாலை மறறும்‌ கோசாலையை சென்று பார்வையிட்டோம்‌. கோசாலையை மிக அருமையாக பராமரித்து வருகிறார்கள்‌. இது மிகப்பெரிய புண்ணியம்‌.

அதேபோல்‌, பாரம்பரியமான சிறு தானிய உணவுகளை கொண்டு இங்கு அன்னதானம்‌ அளிக்கிறார்கள்‌. இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுப்பது, மரங்கள்‌ நடும்‌ பணிகளை மேற்கொள்வது போன்ற ஈஷாவின்‌ செயல்கள்‌ மிகவும்‌ பாராட்டுக்குரியவை. 

ஈஷா அறக்கட்டளையை செம்மையாக நடத்தி வரும்‌ அனைவருக்கும்‌ வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்‌.

இவ்வாறு அவர் கூறினார்‌.

ஈஷாவிற்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்‌ மற்றும்‌ தியான அன்பர்களுக்கு மகா சன்னிதானம்‌ அருளாசி வழங்கினார்‌. மேலும்‌, ஈஷாவின்‌ பிரம்மச்சாரிகள்‌ மற்றும்‌ சந்நியாசிகளுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்‌.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...