பல்லடம் அருகே திரௌபதி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலம்!

பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையத்தில் 34 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் குண்டம் இறங்கும் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வே.கள்ளிப்பாளையம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 34 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோவிலின் குண்டம் இறங்கும் விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து, கிராம சாந்தி நிகழ்வு, முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்வுகளோடு கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இதனையொட்டி, 25 அடி தூரத்திற்கு குண்டம் அமைக்கப்பட்டு 2 நாட்களாக மரக்கட்டைகளை எரியவிட்டு தயார்படுத்தப்பட்ட குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தபின் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அருளாடியபடி குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.



குண்டம் இறங்கிய பக்தர்கள் கருவறையில் உள்ள தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மனை வழிபாடு செய்தனர். 



34 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடைபெறுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 



குண்டம் இறங்கும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். 



வே.கள்ளிப்பாளையம் கள்ளக்கிணறு வாவிபாளையம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...