ராகுல்காந்தி இந்தியர் தானா? - முன்னாள் பாஜக எம்.பியின் சர்ச்சை கருத்து!

திருப்பூரில் பேசிய முன்னாள் பாஜக எம்.பி கார்வேந்தன், இந்திய நாட்டின் குடிமகனாக இருப்பவர் வெளிநாட்டிற்கு சென்றால் நம் நாட்டின் பெருமைகளை பேச வேண்டுமே தவிர, நம் நாடு மற்றும் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசுவது அவர் இந்திய குடிமகனா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.



திருப்பூர்: ராகுல் காந்தி இந்தியர் தானா என்ற சந்தேகம் ஏற்படுவதாக முன்னாள் பாஜக எம்.பி கார்வேந்தன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் உள்ள திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்த இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, 9 ஆண்டுகளில் பாஜக பல்வேறு சாதனைகளை செய்திருகிறது. 



தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கூடிய வகையில் யோகாவை சர்வதேச அளவில் கடைபிடிக்கும் வகையில் சர்வதேச யோகா தினம் கொண்டுவரப்பட்டுள்ளது. அம்பேத்கரை பற்றி பலரும் பேசி வரக்கூடிய சூழ்நிலையில் அம்பேத்கர் பிறந்த, வாழ்ந்த, படித்த, இறந்த என ஐந்து இடங்களை ஒருங்கிணைத்து பஞ்ச திருத்தலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள இந்திய தூதரகங்களில் அம்பேத்கரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் எதிர்க்கட்சிகள் எத்தனை கூட்டங்கள் போட்டாலும் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றது போல பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவார். 

அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியது குறித்த கேள்விக்கு, இந்திய நாட்டைச் சேர்ந்தவர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது நாட்டின் மீது பற்று இருந்தால் இந்திய நாட்டின் பெருமைகளை பற்றி பேசியிருக்க வேண்டுமே தவிர இந்தியாவையும் தலைவர்களையும் பற்றி அவதூறாக பேசியதால் அவர் இந்தியரா என்ற சந்தேகத்தை எழுப்பக் கூடியதாக இருக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...