கோவையில் பிளக்ஸ் பேனர் வைத்த போது விபத்து - 3 பேர் பலியான சோகம்!

கோவை கருமத்தம்பட்டி அருகே தனியார் நிறுவனத்தின் ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின் போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.



கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பிளக்ஸ் பேனர் வைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கருமத்தம்பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ராமசாமி என்பவரது இடத்தில் ராட்சத பேனர்கள் வைக்கும் பணி இன்று மாலை நடைபெற்றது. இந்த பணியை சேலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. 



பேனர் அமைக்கும் பணியின் போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 



இதில் குமார், குணசேகரன், சேகர் என்ற 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.





இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் பேனர்களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 



இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கருமத்தம்பட்டி போலீசார் தலைமறைவாக உள்ள காண்டிராக்டர் பழனிசாமியை தேடி வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக உயரத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவித்தனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...