உதகை செல்ல முடியாமல் தவிக்கும் பொது மக்கள் - போதிய அரசு பேருந்து வசதி இல்லை என குற்றச்சாட்டு

கோடை விடுமுறையில் ஏராளமான மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து உதகைக்கு போதிய அரசு பேருந்து வசதி இல்லாததால், சுற்றுலா பயணிகள் பலரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.



கோவை: சாய்பாபா கோவில் பகுதியில் இருந்து உதகைக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். 

குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறை என்பதாலும் கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் உதகை மற்றும் கோத்தகிரி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து அரசு பேருந்து கோவையில் இருந்து உதகை செல்கிறது. 



இதனிடையே போதிய அரசு பயணிகள் பேருந்து இல்லாததால் உதகைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அரசு பேருந்து இயக்கப்படுகிறது என கூறுகின்றனர். 



ஆனால் ஒரு மணி நேரம் காத்திருந்தும், அரசு பேருந்து வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அங்கு பயணிகள் பேருந்து வந்தவுடன் அங்குள்ள பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அந்த வண்டியில் ஏறுவது வாடிக்கையாகி வருகிறது. 



இதனால் அதிகமான அரசு பேருந்துகளை உதகைக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...