தமிழகத்தில் 10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்பட்டுள்ளது - வேளாண் துறை அமைச்சர் தகவல்!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறுதானியம் குறித்த கருத்தரங்கை துவங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழகத்தில் சிறுதானியங்கள் பயரிட ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



கோவை: தமிழகத்தில் தற்போது, 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ளது என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை தமிழக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். சிறுதானிய கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது, கண்காட்சியில் புதிய ரக சிறு தானியங்கள், விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. சிறு தானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சிறுதானியங்கள் பயரிட ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்படுகிறது. 38.2 மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிய ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் புதிய பயிற்சியை மேற்கொள்ள ஆராய்ச்சி மாணவர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இந்த திட்டம் பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சிறு தானிய வளர்ச்சிக்காக தரமான விதைகள் உள்ளிட்ட செயல்பாட்டிற்காக ரூ.82 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரிடையேயும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். 

தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை சார்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...