கோவை திறந்தவெளி சிறைவாசிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையானது 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிறைவாசிகளுக்கு கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: கோவை சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையானது 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் சிறைவாசிகள் அவர்களின் தண்டனை காலத்தை பயனுள்ள முறையில் கழிக்கவும் அதன் மூலம் வருவாய் ஈட்டவும் விவசாய தொழிலை முதன்மையாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர். 

மேலும் அவர்களுக்கு கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு மற்றும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற சமையல் எண்ணெய் உற்பத்தி செய்தல் போன்ற விவசாயம் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர். 



காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படியும், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் உலக தேனீ வளர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை "கவின் தேனீ பண்ணை சார்பாக தேனீ வளர்ப்பு நிபுணர் ரஞ்சித்பாபு மூலம் சிறைவாசிகளுக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சியும், அதனை விற்பனை செய்யும் முறைகள் குறித்து சிறைவாசிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...