கோவையில் 10 நாளாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவோடு சுற்றிய நாய்.. தன்னார்வ அமைப்பு செய்த பேரூதவி!

கோவை பீளமேடு அடுத்துள்ள சேரன் மாநகர் பகுதியில் உள்ள குமுதம் நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றித்திரிந்த நாய், விலங்குகள் நல தன்னார்வ அமைப்பின் உதவியோடு இன்று மீட்கப்பட்டுள்ளது. நாயின் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் டப்பாவும் அகற்றப்பட்டது.


கோவை: பீளமேடு அருகே பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றி திரிந்த நாய் 10 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

கோவை பீளமேடு அடுத்துள்ள சேரன் மாநகர் பகுதியில் உள்ள குமுதம் நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் நாயின் கழுத்தில் மாட்டிக் கொண்டது.



இதனால் அந்த நாய் உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வந்தது. நாயை மீட்பதற்காக இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர்.

ஆனால் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் இன்று காலை The Planetic Foundation என்ற தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் அங்கு வந்தனர்.

அப்போது குமுதம் நகர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக நாய் படுத்திருந்தது.



குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, லாவகமாக நாயை பிடித்த குழுவினர், அதன் தலையில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து நாயை காப்பாற்றினர்.



இலவசமாக இந்த சேவையை செய்து வரும் தன்னார்வ அமைப்புக்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.



பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...