10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 97.67 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கணித பாடத்தில் 3,649 பேர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.



சென்னை: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில், மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 மாணவ, மாணவியர் எழுதினர்.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 9,14, 320 மாணவ மாணவிகளில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், எப்போதும் போலவே இந்தாண்டும் தேர்ச்சி சதவீதத்தில் மாணவர்களை விட மாணவிகள் 6.5 சதவீதம் அதிகம்.

இந்நிலையில், இந்த தேர்வில், ஆங்கிலம் பாடத்தில் 89 பேரும், கணிதம் பாடத்தில் 3,649 பேரும், அறிவியல் பாடத்தில் 3,584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், மொழிப்பாடத்தில் யாரும் 100சதவீத மதிப்பெண்களை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக 97.67 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2ஆம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீத தேர்ச்சியுடன் 3ஆம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 95.99 சதவீத தேர்ச்சியுடன் 4ஆம் இடத்திலும், மேலும் தூத்துக்குடி மாவட்டம் 95.58 சதவீத தேர்ச்சியுடன் 5ஆம் இடத்திலும் உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத்தேர்வு வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...