கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 19 பேர் காயம்!

சென்னை பூந்தமல்லியில் இருந்து 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் வேனில் சென்னைக்கு திரும்பிய போது, கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேரும் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.


நீலகிரி: ஊட்டி அருகே கோத்தகிரி மலைப்பாதையில் வேன் விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் 19 பேர் காயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை பூந்தமல்லியில் இருந்து 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, இன்று காலை ஊட்டியிலிருந்து கோத்தகிரி மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் சுற்றுலா வேன் சென்று கொண்டிருக்கும் போது, டிரைவர் பிரேக் போட முயன்றுள்ளார்.

ஆனால் பிரேக் பிடிக்காமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

உடனடியாக அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் ரோந்து போலீசார் வேனில் சிக்கியிருந்த நபர்களை மீட்டனர்.

பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மலைப்பாதையில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுவதால், ஓட்டுனர்கள் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...