கோவையில் உயர்ரக போதைப்பொருள் விற்பனை - கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது!

கோவை நவக்கரை அருகே உயர்ரக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 6 கிராம் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக - கேரளா எல்லையான வாளையாறு செல்லும் பாலக்காடு சாலை நவக்கரை அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து mathamphetamine என்ற உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தனிப்படை போலீசார் சாதாரண உடையில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர், உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் மேற்கொண்டனர்.

விசாரணையில், பிடிபட்ட மாணவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமத் பைசல் (வயது18), கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவர் மற்றும் அபினந்த் (வயது21) இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும், இருவரும் பெங்களூரில் இருந்து mathamphetamine என்ற உயர் ரக போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...