கோவை பனைமரத்தூரை சேர்ந்த தென்னரசு, பாஜக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பனைமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பது குறித்து போலீசாருக்கு தென்னரசு தகவல் அளித்ததாக கருதி, அவரை தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்ததாக ஒருவரை தாக்கிய 9பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பனைமரத்தூர் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் தென்னரசு (48). இவர் கோவை பாஜக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இது குறித்து தென்னரசு போலீசாரிடம் கூறியதாக எண்ணி, அப்பகுதி இளைஞர்கள் தென்னரசுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரை தாக்கியதோடு, அவரின் வீட்டின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து அவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பனைமரத்தூரை சேர்ந்த அரவிந்த் (21), சதீஸ்குமார் (20), விஜயகுமார் (19), பத்மா (53), அம்பிகா (45), ரோகினி (41), நந்தினி (42) உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் புகார் அளித்துள்ள தென்னரசு மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.