20 ஆண்டு காவல் பணி நிறைவு செய்த பெண் காவலர் - நற்சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு!

20 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற பெண் காவலர் பூங்கொடிக்கு, தமிழக அரசால் வழங்கப்படும் நற்பணி சான்றிதழை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் வழங்கி பாராட்டினார்.


கோவை: காவல்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பெண் காவலருக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கோவை சரக பணியிடை பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் பெண் காவலர் பூங்கொடி. இவருக்கு கடந்த ஜனவரி 26ல் சென்னையில் குடியரசு தின அணிவகுப்பின் போது, 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும், “தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டது.

இந்நிலையில், பெண் காவலர் பூங்கொடிக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நற்பணி சான்றிதழ், கோவை சரக காவல்துறை அலுவலகத்தில் இன்று வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் நேரில் வழங்கி அவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...