கோவை வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி சார்பில் திருவிளக்கு பூஜை!

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகேயுள்ள வீரபாண்டி மாரியம்மன் கோவில் திடலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற 1508 விளக்குகள் கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜையை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று தொடங்கி வைத்தார்.



கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற மாபெரும் திருவிளக்கு பூஜையை அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள வீரபாண்டி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள திடலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், 2ம் ஆண்டு 1508 விளக்குகள் கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த பூஜையில், முதலாவதாக சிலம்பாட்ட நிகழ்ச்சி, ஒயிலாட்டம் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



அதனைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் எதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.



இதனை ஸ்ரீ வாராஹி மந்திராலயத்தை சேர்ந்த மணிகண்ட சுவாமிகள் மற்றும் சிவ நாசர் பூஜையை நடத்தி வைத்தனர். இந்த பூஜையில் கலந்துக்கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விளக்கு, பூக்கள், எண்ணைய், மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சிப்பு, வெற்றிலை மற்றும் பாக்குகளை விழா குழுவினர் மூலம் வழங்கப்பட்டது.



இதனையடுத்து 1,508 பெண்கள் மற்றும் குழந்தைகள் விநாயகருக்கு பூஜை செய்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அதன்பிறகு ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன. இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்த விழாவில் வீரபாண்டி, கூடலூர் கவுண்டம் பாளையம், நாயக்கனூர், சாமநாயக்கன் பாளையம், காளி பாளையம், திருமலைநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...