பன்றிக் காய்ச்சலுக்கு கோவையில் மேலும் இரண்டு பெண்கள் பலி

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட மர்மக்காய்ச்சல்கள் வெகுவேகமாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால், அன்றாடம் சிலர் உயிரிழப்பதும் வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (57) மற்றும் அதேப் பகுதியைச் சேர்ந்த வசந்தா மேரி ஆகிய இருவருக்கும் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

இதற்காக அவர்கள் அப்பகுதியிலேயே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு இரத்த பரிசோதனையில் ஈடுபட்ட அம்மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதிசெய்தனர்.

இதைத்தொடர்ந்து, பழனியம்மாளும், வசந்தாதேவியும் சிகிச்சைக்காக கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவை அரசு பொது மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை பழனியம்மாளும், இரவு வசந்தாமேரியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பால் 35 பேரும், டெங்கு காய்ச்சலால் 7 பேரும் மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...