சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.2,000 பறித்து தப்பிச் சென்றனர். பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை சின்னியம்பாளையம் பகுதியில் இளைஞர் ஒருவரிடம் செல்போன் மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கவியரசு (21). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த ஆலமரத்தின் அடியில் மறைந்திருந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கவியரசை திடீரென வழிமறித்தனர். அவர்கள் கவியரசை மிரட்டி அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்தனர். மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.2,000 பணத்தையும் பறித்துக்கொண்டு விரைந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கவியரசு பீளமேடு போலீசார் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செல்போன் மற்றும் பணத்தை பறித்த மர்ம கும்பலை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...