திருப்பூரில் அரசு ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்!

சிபிஎஸ்ஐ ரத்து மற்றும் அகவிலைப்படி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் நடைபெற்ற ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.



இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படி சிபிஎஸ்ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், முடக்கப்பட்ட ஒப்புடைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தியும் அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு அமல்படுத்திய அதே தேதியில் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



இந்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து, கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...