யுகாதி பண்டிகை - திருப்பூர் கோவில்களில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாலிபாளையம் பகுதியில் உள்ள பழமையான சடையப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து சென்று வழிபாடு செய்தனர்.



திருப்பூர்: யுகாதி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டம் வாலிபாளையம் சடையப்பன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் சுமந்து சென்று வழிபாடு செய்தனர்.

யுகாதி என்று அழைக்கப்படும் பண்டிகை தெலுங்கு வருடப்பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தெலுங்கு மொழி பேசும் மக்களால், இந்த பண்டிகை கோலாகலாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு யுகாதி பண்டிகையானது மார்ச் 22ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் துவங்கப்படும் காரியங்கள் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கும் என்பதால் ஏராளமானோர் புதிய தொழில்களை இந்த நாளில் துவங்குவது வழக்கம்.



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வாலிபாளையம் பகுதியில் உள்ள பழமையான சடையப்பன் கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானமக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இதனிடையே யுகாதி திருவிழாவை முன்னிட்டு வாலிபாளையம் பகுதியில் உள்ள சடையப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்று வழிபாடு செய்தனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...