கோவை செம்மொழிப் பூங்காவில் அமையவுள்ள அம்சங்கள் என்னென்ன?

கோவையில் அமையவுள்ள செம்மொழி பூங்காவில், வரலாற்றுச் சிறப்புகளை அறியும் வண்ணம் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மரவனம் மற்றும் மகரந்த பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகை பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: தமிழக பட்ஜெட்டில் கோவையில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நவீன செம்மொழி பூங்காவில் 16 வகையான பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டினையொட்டி காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.



அதன்படி 165 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைய உள்ளதாகவும் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பிலும் இரண்டாவது கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைக்கப்பட உள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக அமையப்படும் செம்மொழி பூங்காவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இயற்கையை பாதுகாத்தல் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்களுக்கு கல்வி ஆராய்ச்சி சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றிற்கு பயன்பெறும் வகையிலும் பொதுமக்கள் குழந்தைகளுக்கு சிறந்த பொழுது போக்கிற்கும் பயன்பெறும் வகையில் 172.21 கோடி மதிப்பில் உலக தரத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செம்மொழி பூங்காவில் வரலாற்றுச் சிறப்புகளை அறியும் வண்ணம் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மரவனம் ஆகிய வனங்கள் இடம்பெற உள்ளன. பொதுமக்கள் பூங்காக்களின் வகை மற்றும் அதன் தன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் மகரந்த பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகை பூங்காக்கள் கலை நுட்பத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பூங்கா வளாகத்தில் விசேஷ மண்டபங்கள், உள் அரங்கம், வெளி அரங்கம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறையில், திறந்தவெளி அரங்கம் மற்றும் உடல் பயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகளுடன் அமைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகிலேயே இங்கிலாந்தில் உள்ள கியூ பூங்கா மட்டுமே தாவர உயிரியல் வங்கியாகவும் அதன் தொடர்புடைய ஆராய்ச்சி மையமாகவும் உள்ளது. வெப்ப மண்டல நாடான நமது இந்தியாவில் அது போன்ற பூங்கா இதுவரை அமைக்கப்படாத காரணத்தினாலும் இத்தகைய சிறப்புமிக்க செம்மொழிப் பூங்காவை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...