இந்தியாவை ஒரு குடும்பம் போல பிரதமர் பார்க்கிறார்..! - கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

உலகில் மக்கள் பசியால் வாடும் நிகழ்வு நடந்து கொண்டுதான் உள்ளது. இந்தியாவை ஒரு குடும்பம் போல பிரதமர் பார்க்கிறார். கொண்டு வரப்படும் திட்டங்கள் ஒவ்வொரு குடிமகனுக்குமானதாக உள்ளது. மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுவதில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.



கோவை: குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஜி.20 இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஜி.20 இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது.



இந்த மாநாட்டைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்தியாவின் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.



இந்த மாநாட்டில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களுக்கான கூட்டுக் கல்வி முறை என்ற தலைப்பிலும், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் தொழில் முனைவு என்ற தலைப்பிலும் இளம் தூதுவர்கள் கலந்துரையாடுகின்றனர்.



இந்த மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், கால நிலை, உணவு, சுகாதாரம், வறுமை, கல்வி மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்க உள்ளனர். இந்தியாவில் இந்த சவால்களைப் பிரதமர் திறமையாக எதிர்கொண்டு வருகிறார். கொரோனா பரவலால் உலகமே பாதிக்கப்பட்டிருந்த சூழலில், இந்தியா தடுப்பூசியைத் தயாரித்து நம் மக்களுக்கு வழங்கியதோடு, உலக நாடுகளுக்கும் வழங்கியுள்ளது.

கொரோனா காலத்தில் இ-வித்யா என்கிற திட்டம் மூலமாக நாடு முழுவதற்கும் இலவச கல்வி வழங்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றுவதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. தாய் மொழி கல்வியை ஆரம்பக் கல்வியில் கொடுப்பதே புதிய கல்விக்கொள்கையின் தாரக மந்திரமாக உள்ளது, என்றார்.



இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

நாம் அனைவரும் கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், இலக்கியங்களிலும் பல ஆயிரம் ஆண்டுகளாகத் திகழ்ந்து விளங்கும் மாநிலத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ்க் கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. குறிப்பாகத் திருவள்ளுவரின் திருக்குறள் என்பது மக்களுக்கு, பல்வேறு கலாச்சாரங்களை கற்றுக் கொடுக்கிறது. அதேபோல் சிலப்பதிகாரம், மணிமேகலை தொல்காப்பியம், புறநானூறு போல இலக்கியங்களும் நமது கலாச்சாரங்களை எடுத்துக்கூறுகிறது.

இயற்கை மனித மோதல் நடந்துவருகிறது. இதனால் பூமி வெப்ப மயமாகி வருகிறது. நதிகள் வறண்டு, வனங்கள் காய்ந்து என பல்வேறு மோதல்கள் மனிதனுக்கும் இயற்கைக்குமான போர் நடந்து வருகிறது. பல நாடுகள் உலகை அழிக்கும் வகையிலான ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. புதிய புதிய எலக்ட்ரானிக் உபகரணங்களால் மனிதர்கள் தற்கொலை, மன அழுத்தம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன.

குறிப்பாக மன உளைச்சல் அதிகளவில் காணப்படுகிறது. நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் எப்போது அமைதியான ஆரோக்கியமான உலகை உருவாக்க வேண்டும் என்பதே. விஞ்ஞானிகளுக்கும் விவசாயிகளுக்கும் நன்றி உணவு, மற்றும் புதிய கண்டுபிடித்தமைக்கு. கொரோனா காலத்தில் தடுப்பூசிக்காக உலக நாடுகள் திண்டாடி வந்த நிலையில், இந்தியா தடுப்பூசிகளைத் தயாரித்து அதனை உலக நாடுகளுக்கும் இலவசமாகக் கொடுத்தது.

நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் நமது மரபணுவிலேயே உள்ளது. அதுதான் இந்தியா, அதுவே நமது எண்ணம். வாசுதேவ் குடும்பம் என்பது அரசியலுக்காக அல்ல. தமிழில் கூறப்பட்டுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ளது. இந்தியாவில் இன்னும் சில இடங்களில் வறுமை உள்ளது.

உலகில் மக்கள் பசியால் வாடும் நிகழ்வு நடந்து கொண்டுதான் உள்ளது. இந்தியாவை ஒரு குடும்பம் போல பிரதமர் பார்க்கிறார். கொண்டுவரப்படும் திட்டங்கள் ஒவ்வொரு குடிமகனுக்குமானதாக உள்ளது. மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுவதில்லை. இளம் தலைவர்களான நீங்கள் இந்த மாநாட்டில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது நிச்சயம் உலகின் வளர்ச்சிக்கு உதவும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா, நடிகை கவுதமி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...