துபாயில் சிக்கிய கோவையை சேர்ந்த ஏசி மெக்கானிக் - விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு சிகிச்சை!

துபாயில் இருதய நோயால் ஒரு வருடமாக அவதிப்பட்டு வந்த ஏசி மெக்கானிக் தமிழக அரசின் நடவடிக்கையால் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: துபாயில் இருதய நோயால் தவித்து வந்த நபர் அரசின் நடவடிக்கையால் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுக்கரை முஸ்லிம் காலனியை சேர்ந்தவர் பைரோஸ் கான் நவாப் ஜான்(43). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு சென்று ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய கோளாறு மற்றும் மூளை ரத்தக் கசிவு நோயால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக தொடர்ந்து சிகிச்சை பெற முடியாததால் இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து தமிழகத்தில் தனது சொந்த ஊரில் சிகிச்சை பெற விரும்பியதாக கூறப்படுகிறது.

இந்திய தூதரக அலுவலக நண்பர் மூலம் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபி கிருஷ்ணன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக அமைச்சர் உதயநிதியிடம் துபாயில் சிகிச்சை பெற்று வரும் நபரை தமிழகத்திற்கு அழைத்து வர உதவி செய்யும் படி சுபி கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி உத்தரவின் பேரில் பொதுத்துறை மற்றும் சுகாதாரத் துறை துபாய் நாட்டில் இருந்து அவரை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழக அரசின் உடனடி நடவடிக்கையால் இன்று காலை பைரோஸ் கான் விமான மூலம் கொச்சி வந்தடைந்தார். கொச்சி விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது தாய் தந்தை மற்றும் மனைவி தம்பி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இருதய நோயால் பாதிக்கப்பட்ட பைரோஸ் கான் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...