தாராபுரம் வட்டாரத்தில் இயங்கி வரும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து திடீர் சோதனை நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த சோதனையில் உரிமம் காலாவதியான 2 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து திடீர் சோதனை நடைபெற்றது.
தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து சோதனை மேற்கொள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில், தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் 10க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களில் திடீர் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் உரிமம் காலாவதியான 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும், இதுபோன்று உரிய ஆவணம் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதேபோல், ஆட்டோ ரிக்ஷாக்கள், இரவு நேரங்களில் முகப்பு விளக்கு பயன்படுத்தாமல், இயக்கிய வாகனங்களும் தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.