திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காலாவதியான பொருட்களை ஏற்றிவந்து நெடுஞ்சாலையோரங்களில் கொட்ட முயன்ற இரண்டு வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அந்த லாரிகளுக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் வாகனங்களில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.
குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவில் கோழிக்கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் கட்டிடக் கழிவுகள் என மண்ணுக்கும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பலவிதமான குப்பைகள் காலாவதியான பொருட்கள் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஒரு சில கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து குப்பைகளைக் கொட்டும் வாகனங்களை சிறைபிடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கணபதிபாளையம் ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான காலாவதியான குளிர்பானங்களை கொண்டு வந்து கொட்டிய வேனை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
தகவலறிந்து வந்த ஊராட்சி நிர்வாகத்தினர், குப்பைகளை கொட்ட முயன்ற அந்த வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இந்தநிலையில், அந்த பகுதிக்கு அருகில் கழிவுகளை கொட்டிய லாரியையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.

தூத்துக்குடியிலிருந்து வாழைத்தார்களை ஏற்றி வந்த அந்த லாரி, உடுமலையில் வாழைத்தார்களை இறக்கி விட்டு திரும்பி செல்லும்போது கழிவுகளை கொட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அந்த லாரிக்கும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காலாவதியான கழிவுகளை கொட்ட முயன்ற வாகனங்களை அடுத்தடுத்து பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.