கோவை யானைக்குட்டியின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு - ஆய்வுக்கு அனுப்பிய வனத்துறை!

கோவை பெரியநாய்க்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்த யானை குட்டியின் எழும்பு, தோல் உள்ளிட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை வனத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் மாங்குலி, தடாகம் காப்பு காட்டு பகுதியில் நேற்று வனத்துறை களப்பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பகுதியில் திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது இறந்த யானை குட்டியின் உடல் பாகங்கள், எலும்புகள் சிதறிக் கிடந்தன.

தகவலறிந்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டதோடு, ஆங்காங்கே சிதறி கிடந்த எலும்பு துண்டுகள், உடல் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்தனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட மருத்துவ அலுவலர் சுதாகர் தலைமையில் கோவை கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், ரேஞ்சர் செல்வராஜ் மற்றும் தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்பினர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், கண்டறியப்பட்ட எலும்புகள் வைத்து யானை குட்டி வயது சுமார் மூன்று வார காலமாக இருக்கலாம் என்றும், அக்குட்டி இறந்து பிறந்து இருக்கலாம் அவ்வாறு இறந்த யானை குட்டியை வனப்பகுதியில் உள்ள செந்நாய் உள்ளிட்ட விலங்குகள் உண்டதால் பாகங்கள் சிதறி கிடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டது.

பின்னர், சேகரிக்கப்பட்ட யானைக் குட்டியின் ஒரு சில எலும்புகள் மட்டும் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மற்ற பாகங்கள் அதே பகுதியில் வனத்துறையினரால் புதைக்கப்பட்டது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...