மர்ம காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பலி


கோவை செட்டிபாளையத்தை அடுத்த பெரியகுயிலி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு தீக்‌ஷா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தீக்‌ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரது பெற்றோர் தீக்‌ஷாவை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய தீக்‌ஷா இன்று காலை பேச்சு மூச்சின்றி காணப்பட்டார். 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.  அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீக்‌ஷா மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தீக்‌ஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...