வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் 48 மணி நேர ஓய்வு அறிவுறுத்தியுள்ள நிலையில், நாளை முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மேட்டுப்பாளையம் சாலையில் காலை 9 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.


Coimbatore: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி BJP வேட்பாளரும், கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்ட வானதி சீனிவாசனுக்கு காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கோவை வடக்கு தொகுதி முழுவதும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த வானதி சீனிவாசன், தொடர் பயணத்தின் காரணமாக உடல்நலக் குறைவுக்கு ஆளானார். இதனையடுத்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அடுத்த 48 மணி நேரம் முழுமையாக ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.



வானதி சீனிவாசன் ஓய்வில் இருக்கும் நிலையில், பிரச்சாரப் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக தமிழக BJP முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை கோவை வடக்குத் தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தனது 'சகோதரி' வானதி சீனிவாசனுக்காக களமிறங்கும் அண்ணாமலை, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார்.



நாளை (ஏப்ரல் 11) காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகில் அண்ணாமலையின் பிரச்சாரப் பயணம் தொடங்க உள்ளது. இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலில் ஏற்பட்ட வீக்கம் குணமடைந்தவுடன், வானதி சீனிவாசன் மீண்டும் தனது இறுதிக் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு எஞ்சியுள்ள நாட்களில் தீவிர பரப்புரை மேற்கொள்ள BJP திட்டமிட்டுள்ள நிலையில், இந்த உடல்நலக் குறைவு தற்காலிக இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...