மாணவர்களுக்கு தங்கள் மையத்துறையிலேயே வேலைவாய்ப்பு தரும் விதமாக குமரகுரு கல்லூரிக்கும் பி3 நிறுவனத்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம்


கோவையை சேர்ந்த குமரகுரு கல்லூரிக்கும் ஜெர்மன் நாட்டை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்பட்டு வரும் பி3 நிறுவனத்திற்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 



மாணவர்களுக்கு தங்களின் மையத் துறையிலேயே வேலைவாய்ப்பு அமைத்து தருவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். 

பி3 நிறுவனத்தின் பயிற்சி பிரிவான பி3ஏ-உம், குமரகுரு கல்லூரியும் இணைந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளவுள்ளது. 

இப்பயிற்சியில் தேர்ச்சிபெறுபவர்களுக்கு பி3 நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு அளிக்கப்படும். மற்ற மாணவர்களுக்கு பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றது.

குமரகுரு நிறுவனத்தின் தலைவர் சங்கர் வானவராயர் அவர்களுக்கும், பி3 நிறுவனத்தின் துணைத் தலைவர் நவ்தீப் கிரண் புராணிக் அவர்களுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக மாணவர்களுக்கு வடிவமைப்பு, ஆராய்தல், மற்றும் பராமரிப்பு போன்ற பல்வேறு கோணங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்துறை சார்ந்த ப்ராஜெக்ட், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ப்ராஜெக்ட், இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

Newsletter

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...