வறுமை காரணமாக விஷம் குடித்து பெண் குழந்தைகள் உட்பட 3 பேர் தற்கொலை

கோவை: வறுமையின் காரணமாக கோவையைச்  சேர்ந்த தந்தை குழந்தைகள் மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் அடுத்த இடையர்பாளையம் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தர்வர் ராஜெந்திரன்.

மனைவியை பிரிந்த இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுகேஷ், பிரபா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் வறுமையில் நீண்ட நாட்களாக
சிரமப்பட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மனமுடைந்த ராஜேந்திரன் செவ்வாய்கிழமை இரவு குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் அதனை சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து குழந்தைகளின் சத்தத்தை அடுத்து அருகில் இருந்தவர்கள் முவரையும் மீட்டு  உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவில் குழந்தைகளும், காலையில் ராஜேந்திரனும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். இதனை அடுத்து மூன்று பேரின் உடல்களும்  பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ளது.வறுமையின் காரணமாக மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Solar Panels at Coimbatore's Ukkadam Periya Kulam Boost Power Generation Amid Rising Summer Heat

Coimbatore Corporation's floating solar panel project at Ukkadam Periya Kulam is generating increased electricity due to...

BJP's Annamalai Condemns Obstruction of Perur Patteeswarar Temple Chariot Festival

BJP's former state president Annamalai has condemned the denial of no-objection certificate by PWD officials for the Pan...

Man Falls from Second Floor While Talking to Wife on Phone in Coimbatore, Dies

A 33-year-old JCB operator from Pudukkottai died after accidentally falling from the second floor while talking to his w...

Annamalai Condemns Ban on Peelamedu Patteeswarar Temple Chariot Festival

BJP leader Annamalai has condemned the Public Works Department's refusal to issue a no-objection certificate for the cen...

AIADMK releases manifesto with 297 promises, free fridge and ₹2,000 aid announced

AIADMK released its election manifesto with 297 promises, including free fridge for ration card holders, ₹2,000 aid for...

Class 4 Student Returns Lost Purse with Cash to Rightful Owner in Coimbatore

A nine-year-old student from Coimbatore found a purse containing Rs 9,500 and important documents on the road. She immed...